You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
72 பேர் கொண்ட கூட்டுக் குடும்பம்: 2000 ஆயிரம் ரூபாய்க்கு காய்கறி, 10 லிட்டர் பால்
மகாராஷ்டிராவின் சோலாபூரில் 4 தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது குடும்பத்தில் 72 பேர் உள்ளனர். டோய்ஜோட் குடும்பம் கர்நாடகாவிலிருந்து சோலாப்பூருக்கு 100 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்தனர்.
"எங்களுடையது மிகப்பெரிய குடும்பம் காலை மாலை என ஒவ்வொரு வேளையும் 10 லிட்டர் பால் தேவைப்படும். ஒரு வேளை சாப்பிட்டிற்கு 1000 - 2000 வரை மதிப்பிலான காய்கறிகள் தேவை. இதுவே அசைவம் சமைக்கும்போது 3-4 மடங்கு அதிகமாகும். ஒரு மாதத்திற்கு 40 - 50 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்துவோம். பொதுவாக பொருட்களை மொத்தமாக வாங்கி விடுவோம். அப்போதுதான் கட்டுப்படியாகும். ஒரு வருடத்திற்கான அரிசி, கோதுமை, பருப்பு என 40 - 50 மூட்டைகளை வாங்கி கொள்வோம். ஒரு சிலிண்டர் 3-4 நாட்களுக்கு மட்டுமே வரும்." என்கிறார் இந்தக் குடும்பத்தின் மூத்தவரான ரமேஷ் டோய்ஜோட்.
இந்த குடும்பத்தின் அளவை கண்டு இங்கு திருமணமாகி வர பெண்கள் அஞ்சியுள்ளனர்.
"முதலில் இந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கண்டு அச்சமாக இருந்தது. ஆனால் இங்குள்ள அனைவரும் எனக்கு உதவினர். எனது மாமியார், தங்கைகள், எனது கணவரின் தம்பிகள் என அனைவரும் எனக்கு உதவி செய்தனர்." என்கிறார் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நைனா.
இந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கூட்டு குடும்பமாக இருப்பது பலன் தருவதாக தெரிவிக்கின்றனர்
"நாங்கள் சிறுவயதில் இருக்கும்போது விளையாட வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது இல்லை. நாங்கள் தைரியமாக பிறருடன் உரையாடுவோம். எனது நண்பர்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து இருப்பதை கண்டு வியப்படைவர்"
இன்று டோய்ஜோட் குடும்பம் பல வர்த்தகங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றாக இருப்பது அதற்கு ஏதுவாக இருப்பதாக இவர்கள் உணருகின்றனர்
"இப்போது எங்களிடம் 8 கடைகள் உள்ளன. வசந்த கேப் வர்த்தகத்தில் நாங்கள் தொடங்கினோம். அதன் பின் மெத்தையில் போடும் பெட்ஷீட்டுகளை தயார் செய்தோம் அதன்பின் கால்மிதிகள், ஸ்கீரீன்கள், பெரோல் பம்ப, சிமெண்ட் வர்த்தகம் ஆகியவற்றில் வர்த்தகம் செய்கிறோம்." என்கிறார் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உமேஷ் டோய்ஜோட்
நாங்கள் கூட்டு குடும்பமாக இருப்பதால் இதை செய்ய முடிகிறது. தனியாக இருந்தால் இதை செய்திருக்க முடியாது. ஒற்றுமையாக இருப்பதே எங்களின் வலிமை என்கிறார் அவர்.
செய்தியாளர் - ஹர்ஷால் அகுடே
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - ராகுல் ரான்சுபே
தயாரிப்பு - ப்ரஜக்டா துலப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்