தீபாவளிக்கு புதுச்சேரியில் அறிமுகமாகும் சர்க்கரை இல்லா சாக்லேட்
புதுச்சேரியில் இயங்கிவரும் சாக்லேட் தொழிற்சாலையில் 100% சர்க்கரை சேர்க்காத சாக்லேட்டை இந்தியாவிலேயே கிடைக்கும் மூலப் பொருட்களில் தயாரித்துள்ளனர்.
கடந்த 2018 ஆண்டு முதல் சர்க்கரை இல்லாமல் இனிப்பு சுவையை உணரும் வகையில் சாக்லேட் தயாரிக்க மேற்கொண்டு முயற்சியில் 40க்கும் மேற்பட்ட முறை முயற்சித்து, தற்போது இது முழு வடிவம் பெற்றுள்ளது.
பொதுவாக தீபாவளி என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இனிப்பு உள்ளிட்ட பலகாரங்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கம், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பு பலகாரங்கள் சாப்பிட விரும்புவார்கள்.
ஆகவே தீபாவளி நேரத்தில் அதிகம் சாக்லேட் விற்பனையாகும் என்பதை உணர்ந்து, இந்த சர்க்கரை இல்லாத சாக்லேட்டை அனைத்து தரப்பிலும் கொண்டு செல்ல தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்