திருட்டுப் பட்டத்திலிருந்து குடும்பத்தை மீட்ட 60 வயது பெண் விவசாயி
பிரசுரிக்கப்பட்டது
நர்மதா சவாண் இன்று ஒரு வெற்றிகரமான விவசாயி. ஒரு குற்றவாளியாக பார்க்கப்பட்டு வந்த தனது கணவரின் அடையாளத்தை இவர் வெற்றிகரமாக அழித்திருக்கிறார்.
பண்ணை விவசாயம் இன்று இவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் மதிப்பை கொடுத்திருக்கிறது.
குற்ற நடவடிக்கைகளில் இருந்து மாறி மிகச்சிறப்பான வழியில் பயணிப்பதை பாராட்டி ஔரங்கபாத் காவல்துறை நர்மதா குடும்பத்தை ஊருக்கே நேரில் வந்து பாராட்டியது.
1,200 சாத்துக்குடி மரங்கள், ஒரு டிராக்டர், மாட்டு வண்டி, 3 கிணறுகள் உட்பட விவசாய சாதனங்களுடன் தங்கள் சொந்த வீடு கட்டும் கனவை நோக்கி உழைத்து வருகிறது இந்தக் குடும்பம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்