கேரளாவில் 87 வயது தாயை நீலக்குறிஞ்சி பூக்களைப் பார்க்க மலை உச்சிக்கு சுமந்து சென்ற மகன்கள்

காணொளிக் குறிப்பு, 87 வயது தாயை நீலக்குறிஞ்சி பூக்களைப் பார்க்க சுமந்து சென்ற மகன்கள்
பிரசுரிக்கப்பட்டது

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க விரும்பிய தங்கள் 87 வயது தாயை அவரது இரண்டு மகன்கள் தூக்கிச் சென்ற காட்சி சமூக ஊடகத்தில் வைரலாகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கள்ளிபாறை மலை முகடுகளில் நீலக்குறிஞ்சி பூக்கள் இப்போது பூத்துக் குலுங்குகின்றன.

இந்தக் குறிஞ்சி மலர்களைப் பார்க்க விரும்புவதாக தனது மகன்கள் ரோஜன், சத்யன் ஆகிய இருவரிடமும் கூறியுள்ளார் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 87 வயது ஏலிக்குட்டி என்ற பெண். வயது முதிர்வு காரணமாக அவர் நடக்கும் நிலையில் இல்லை.

ஆனாலும், தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று மகன்கள் இருவரும் முடிவு செய்தனர். இந்த பயணம் அவர்களுக்கு எப்படி இருந்தது? இந்த காணொளியைப் பாருங்கள்.

செய்தியாளர் - பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு - ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: