ஆந்திராவில் திருடப்பட்ட கைபேசிகளை வாட்ஸ்அப் மூலம் மீட்கும் காவல்துறை
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திர பிரதேசத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள போலீசார் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கைபேசிகளைக் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
சமீபத்தில், விஜயநகரம் போலீசார் 175 கைபேசிகளையும் கர்னூல் போலீசார் 564 கைபேசிகளையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
விஜயநகர மாவட்ட காவல்துறை, எவருடைய கைபேசியையும் கண்டுபிடித்து 15 முதல் 30 நாட்களுக்குள் ஒப்படைப்போம் என்கிறது. கைபேசியை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையத்துக்குக் கூட வரவேண்டியதில்லை என்று கூறிய காவல்துறையினர், ஒருவர் கைபேசியை தொலைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் விளக்கினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்