பார்வை இழந்த முதியவர்: கிணற்றில் மின் மோட்டார் பழுது பார்த்து வாழ்க்கை நடத்தும் நம்பிக்கை மனிதர்
பிரசுரிக்கப்பட்டது
இவர் பெயர் சிந்தம் ராஜையா. சிறு வயதிலேயே கண் பார்வை இழந்து விட்டார். யாசித்து பிழைப்பு நடத்த விரும்பாமல், பல்வேறு வேலைகளை செய்து சொந்தக்காலில் நிற்கிறார். கண் பார்வை இல்லாதபோதும் கிணறுகளில் மின் மோட்டார்களை பழுதுபார்த்து தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
ராஜையாவுக்கு 4 வயதாக இருந்தபோது கண்ணில் பிரச்னை ஏற்பட்டது. அவரது பெற்றோர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், அவரது நிலைமை மோசமாகி அவர் பார்வையை இழந்தார். தெலங்கானாவின் கரீம் நகரில் உள்ள பிரதிமா மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், அவரை 100% பார்வையற்றவர் என அறிவித்து, 2009 ஆம் ஆண்டு அதற்கான சான்றிதழை அளித்தனர்.
செய்தியாளர் - பிரவீன் ஷுபம்
ஒளிப்பதிவு - நரேஷ்
படத்தொகுப்பு - ஸ்ரீனிவாஸ் சிண்டா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்