ஆண்கள் மட்டுமே வாசிக்கும் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்கும் பெண்

பிரசுரிக்கப்பட்டது

சுமதி மதியழகன், திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலில் பழங்கால தாள வாத்தியங்களான 'பஞ்சமுக வாத்தியம்' மற்றும் 'சுத்த மத்தளம்' இசைக்கும் கலையில் தனது தந்தை செல்வராஜைப் பின்பற்றி வருகிறார்.

பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே செய்துவந்த பணி இது.

சுமதி மதியழகன் 2018 ஆம் ஆண்டு முதல் ஆன்மீக விழாக்களில் வாத்தியங்களை வாசித்து வருகிறார்.

இவரது மகள் சுஷ்மா சங்கரியும் இந்த வாத்தியங்களை வாசிக்க கற்றுக்கொண்டார். சுமதி கலந்து கொள்ள முடியாத விழாக்களில், இவரது மகள் இந்த வாத்தியங்களை வாசித்து வருகிறார்.

தயாரிப்பு - ஆர்.அருண் குமார்

படத்தொகுப்பு - நடராஜன் சுந்தர் & ஜெரின் சாமுவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: