பஞ்சாப் கைதிகள் வாழ்க்கைத் துணையை தனிமையில் சந்திக்க அனுமதிக்கும் திட்டம்

காணொளிக் குறிப்பு, பஞ்சாப் கைதிகள் வாழ்க்கைத் துணையை தனிமையில் சந்திக்க அனுமதிக்கும் திட்டம்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சிறையில் உள்ள குற்றவாளிகள் அவர்களின் துணையை தனி அறையில் சந்திக்கும் திட்டம் ஒன்றை பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியது. அவர்கள் பாலியல் உறவிலும் ஈடுபடலாம். இந்த திட்டம் தொடங்கி ஒரு சில மாதங்களே ஆனாலும் சிறைவாசிகள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சிறைவாசிகளில் ஒருவரான 37 வயது ஜோகா சிங், அமிர்தசரஸை சேர்ந்தவர். இவர் இந்திய தண்டனைச் சட்டம் 420 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூரை சேர்ந்தவர் 60 வயது குர்ஜித் சிங். இவர் கொலை வழக்கு ஒன்றில் கடந்த சில மாதங்களாக பஞ்சாபில் உள்ள கோவிந்த்வால் சிறையில் உள்ளார். குடும்பத்தினரிடமிருந்து தள்ளி சிறையில் இருக்கும் இவர் தனிமையான உணரத் தொடங்கினார். மன அழுத்தமும் இருந்தது. ஆனால் தனது ஒரு அறையில் தனது மனைவியுடன் இரண்டு மணி நேரம் தங்க வாய்ப்பு கிடைத்த பிறகு சற்று ஆறுதல் கிடைத்தது என்கிறார்.

செய்தியாளர் - அரவிந்த் சப்ரா

படத்தொகுப்பு - குல்ஷன் குமார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: