"இதைவிட கட்சி துரோகம் எதுவும் இருக்க முடியாது" - திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின்

பிரசுரிக்கப்பட்டது

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் அவர் உரையாற்றினார்.

"மழையே பெய்யவில்லை என்றாலும் மழை அதிகமாகப் பெய்தாலும் என்னை தான் குறை சொல்வார்கள். திமுக தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருப்பதால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இருக்கிறது.

இத்தகைய நிலையில் மேலும் துன்பப்படுத்துவது போல, மூத்தவர்களோ அமைச்சர்களோ நடந்துகொண்டால் என்ன சொல்வது, யாரிடம் சொல்வது?

தினமும் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கிவிடக் கூடாது என்ற நினைப்போடு தான் கண் விழிக்கிறேன்," என்று பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: