இமிடேஷன் ஜுவல்லரிக்கு புகழ்பெற்ற ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்

பிரசுரிக்கப்பட்டது

ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிலகலப்புடி, இமிடேஷன் ஜுவல்ஸ் என்று சொல்லக்கூடிய சாயல் நகைகளின் உற்பத்திக்கு நன்கு அறியப்பட்ட பகுதியாகும். இது வெண்கலம், இரும்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்களின் மீது தங்கம் மற்றும் வெள்ளியை பூசுவதன் மூலம் செய்யப்படுகிறது. நகைகளை பளபளப்பாக்க, பிரத்யேக திரவம் ஒன்று பயன்படுத்தப்படுகிறது.

1890ஆம் ஆண்டுக்கு முன்னர், மும்பையில் இருந்து வந்த நபர் ஒருவரிடம் இருந்து இந்த கலையை கற்றுக்கொண்டதாக, உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். பின்னர் அது விரிவடைந்து குடிசைத் தொழிலாக மாறியது. இமிடேஷன் நகைகள் தயாரிப்பதற்காக ஒரு நகை பூங்கா நிறுவப்பட்டது. அந்த பூங்காவில் இன்று 230க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகளில் சுமார் 3000 பேர் பணிபுரிகின்றனர். ஆண்டு வருவாய் 230 கோடிக்கும் அதிகம்.

செய்தியாளர் - ஷங்கர் வடிசெட்டி

ஒளிப்பதிவு - ரவி பெட்போலு

படத்தொகுப்பு - நவீன் கண்டேரி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: