தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரூ. 25 லட்சம் ரூபாய் பரிசு: பெண் கல்விக்கு உதவ முனையும் வங்கி ஊழியர்

பிரசுரிக்கப்பட்டது

'கௌன் பனேகா க்ரோர்பதி' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 லட்சம் ரூபாய் பரிசு பெற்ற பெண் வங்கி ஊழியர், அந்தப் பணத்தில் தான் வீடுகட்டிக் கொள்வதோடு, பெண்களின் கல்விக்கு உதவ திட்டங்கள் வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்காக மட்டும் அவர் பாராட்டப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில், பெண்களின் கல்விக்காக உதவ அவர் எடுத்துகொண்ட முயற்சியும் பாராட்டப்பட்டது. பள்ளிக்குச் செல்ல முடியாத சில பெண்களுக்கு ஆர்த்தி கற்பிக்கிறார். அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிராமத்தில் உள்ள குருத்வாராவுக்கு சென்று எந்த கட்டணமும் வாங்காமல் பெண்களுக்கு கல்வி கற்பிக்கிறார்.

செய்தியாளர் - குர்மிந்தர் கிரேவால்

படத்தொகுப்பு -ராஜன் பாப்னேஜா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: