You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள் - அசாமில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
அசாமில் வசிக்கும் நிர்மலிக்கு, அவரது மகளே திருமணம் செய்து வைத்த கதை இது. நிர்மலியின் முதல் திருமணம் வெற்றிகரமாக அமையவில்லை. 20 வயதில் தனது மகளோடு புகுந்த வீட்டை விட்டு நிர்மலி வெளியேறினார். அதன் பிறகு, ஒரு வேலை செய்து கொண்டே, மீண்டும் படிக்க ஆரம்பித்தார். நிர்மலிக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில்தான் அவர் ஒருவரை சந்தித்தார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, திருமணம் வரை சென்றது. இந்த முடிவுக்கு, தனது 20 வயதான மகளிடம் நிர்மலி சம்மதம் கேட்டார். அவரும் சம்மதம் தெரிவிக்க, அவரது திருமணம் மகிழ்ச்சியாக நடந்தது.
தயாரிப்பு: சுசீலா சிங்
படத்தொகுப்பு : புஷாரா ஷேக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்