மதுரை - ஆதரவற்ற மன நோயாளிகளுக்கு இசை, தியானத்துடன் சிகிச்சை

காணொளிக் குறிப்பு, ஆதரவற்ற மன நோயாளிகளுக்கு இசை, தியானத்துடன் சிகிச்சை
பிரசுரிக்கப்பட்டது

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஆஸ்டின்பட்டியில் அரசு நுரையீரல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காச நோய் தனிப்பிரிவில், ஆதரவற்ற மன நோயாளிகளுக்கு தியானம், இசை மற்றும் நடனம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலையில் ஆதரவற்றோராக இருக்கும் மனநோயாளிகளை மீட்டெடுத்து வந்து, இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார் இங்கு உள்ளுறை மருத்துவராக பணியாற்றும் காந்திமதி நாதன்.

அசாம், கேரளா, சென்னை, நாமக்கல், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய இடங்களை சேர்ந்த 56 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மன அழுத்ததில் இருந்து அவர்களை விடுவிக்க, தனி அறையில் தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மனநோயில் இருந்து ஓரளவு மீண்டவர்களுக்கு சுய தொழில் கற்றுத் தரப்படுகிறது.

இவர்களுக்கு தனியாக விளையாட்டு அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, தினமும் மாலை சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக பல்வேறு திரைப்படப் பாடல்கள் ஒலிப்பரப்படுகின்றன. அங்கு சிகிச்சை பெற்று வரும் மனநோயாளிகள் இந்த பாடல்களுக்கு நடனமாடி உற்சாகத்துடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

தயாரிப்பு & ஒளிப்பதிவு - பிரசன்னா வெங்கடேஷ்

படத்தொகுப்பு - ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: