ஏழரை அடி உயரம், 220 கிலோ எடை கொண்ட சைக்கிளை உருவாக்கிய சென்னை தாத்தா
ஏழரை அடி உயரம், 220 கிலோ எடை கொண்ட சைக்கிளை சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் உருவாக்கியுள்ளார். இந்த சைக்கிளை வடிவமைக்க சுமார் ஒன்றரை வருடம் தேவைப்பட்டது என்று கூறும் ராஜேந்திரன், 3 சக்கரங்களில் இயங்கக்கூடிய இந்த சைக்கிளில் இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார்.கடந்த 25 ஆண்டுகளாக இதுபோன்று பல்வேறு வடிவங்கள் மற்றும் வெவ்வேறு அளவுகளில் வித்தியாசமான சைக்கிளை உருவாக்கி வரும் ராஜேந்திரன் லேத் தொழிலுக்கு செல்கிறார். இதன் மூலம் வரக்கூடிய வருமானம் மட்டுமின்றி வித்தியாசமான சைக்கிளை உருவாக்க தேவைப்படும் கனரக இரும்புக் கம்பிகளின் கழிவுகளை சேகரித்து இதுவரை 3 வித்தியாசமான சைக்கிளை உருவாக்கியுள்ளார். நான்காவதாக சக்கரத்தின் நடுவில் அமர்ந்து ஓட்டும் வடிவில் தற்போது ஒரு சைக்கிளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தயாரிப்பு - லட்சுமி காந்த் பாரதிஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்