பிரிட்டனில் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே அமைதியின்மை - குவிக்கப்பட்ட காவல்துறை
பிரசுரிக்கப்பட்டது
இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர. இந்தச் சம்பவம் . பிரிட்டனின் கிழக்கு லெஸ்டர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் இடையே ஏற்பட்ட அமைதியின்மைக்கு பிறகான காட்சிகள் இவை.
ஆன்லைனில் வெளியான காணொளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதைப் பார்க்கமுடிகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வாழும் பிரிட்டனின் கிழக்கு லெஸ்டர் பகுதியில், தொடர்ச்சியாக மோதல் நடைபெற்றது. அதன் நீட்சியாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்