கூந்தலை வெட்டி, ஹிஜாபை கொளுத்தி போராடும் முஸ்லிம் பெண்கள் - காரணமாக இருந்த 22 வயது பெண்
பிரசுரிக்கப்பட்டது
எரிக்கப்படும் ஹிஜாபகள். வெட்டி எறியப்படும் கூந்தல். திடீரென சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடும் பெண்கள். யார் இவர்கள்? இத்தனைக்கும் பின்னணியில் இருப்பது 22 வயது பெண் ஒருவர் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், இரானை சேர்ந்த அந்த 22 வயது இளம் பெண்னின் மரணம் தான் இத்தனை போராட்டங்களுக்குமான பின்னணி.
மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத அமலாக்கக் காவல்துறை என்று புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாமிய மத நெறிமுறகளை மீறினால் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாசா அமினியும் கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்