You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வயது தடையில்லை: புகைப்படக் கலையில் அசத்தும் 57 வயது சத்யபாமா
புகைப்படத்துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் காரணமாகப் பல போட்டிகள் நிலவுகின்றன. அதற்கிடையே, தன்னுடைய ஐம்பதுகளில் நுழைந்து வென்று காட்டியுள்ளார் சத்தியபாமா.
சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தீவட்டிப்பட்டி அருகேயுள்ள நாச்சனம்பட்டியைச் சேர்ந்த 57 வயதான சத்யபாமா, தொழில்முறை புகைப்படக் கலைஞராக தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார்.
கணவரின் திடீர் மரணத்தால் வறுமையின் பிடியில் சிக்கிய சத்யபாமா, கணவருடைய தொழிலான புகைப்படம் எடுக்கும் தொழிலையே தனது பாதுகாப்புக் கேடயமாக மாற்றிக் கொண்டார். வறுமையின் பிடியில் சிக்கிய சத்யபாமா எடுத்த முடிவு அவரை சிறந்த சாதனையாளராக மாற்றி இருக்கிறது.
இவருடைய கணவர் தீவட்டிப்பட்டியில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வந்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. தன் மகனை படிக்க வைக்க வீட்டு வேலை உட்பட பல வேலைகளைச் செய்துவந்த சத்யபாமா, ஒரு கட்டத்தில் கணவரின் புகைப்படத் தொழிலை கையில் எடுக்கிறார்.
தயாரிப்பு: ஏ.எம்.சுதாகர்
படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்