டெல்லியில் அரசு பேருந்துகளை ஓட்டும் பெண்கள் எதிர்கொண்ட சவால்கள்

பிரசுரிக்கப்பட்டது

டெல்லி போக்குவரத்து கழகத்தில் 11 பெண் ஓட்டுநர்களை டெல்லி அரசு நியமித்துள்ளது. இது பெண் ஓட்டுநர்களின் முதல் குழுவாகும்.

இதில் ஒருவர் ஹரியானாவில் உள்ள சார்க்கி தாத்ரியில் இருந்து வரும் பபிதா. இவர் தமது கிராமத்தில் விவசாயத்தில் பெற்றோருக்கு உதவி செய்து வந்தார். இவர் டிராக்டர் ஓட்ட கற்றுக்கொண்டு கனரக வாகன உரிமத்துக்கு விண்ணப்பித்தார்.

மற்றொருவர், ஹரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து வந்த நீத்து. இவர் ஆசிரியையாக ஆவதற்கான பயிற்சியை எடுத்துள்ளார். ஆனால் அங்கு காலி பணியிடங்கள் இல்லாததால் அவர் பயிற்சி மையத்தில் வேலை செய்யத் தொடங்கினார். சிறிய வாகனங்களை ஓட்டிய அனுபவம் அவருக்கு கைகொடுத்தது. இவர்களின் கதை என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: