கடல் மீன் காணொளிகளை பதிவிடும் மாற்றுத்திறனாளி யுடியூபர்

காணொளிக் குறிப்பு, மாற்றுத்திறனாளி யுடியூபரின் கடல் மீன் காணொளிகள்
பிரசுரிக்கப்பட்டது

கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகள் குறித்த வீடியோக்களை பதிவு செய்து சமூக ஊடக பயனர்களை ஈர்த்து வருகிறார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யுடியூபர் தீனா.ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் சேர்ந்த தீனா என்ற மாற்றுத்திறனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம், மூக்கையூர் பகுதிகளில் உள்ள துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் மற்றும் மீன்கள் எவ்வாறு உணவாக சமைத்து சாப்பிட வேண்டும் உள்ளிட்டவைகளை வீடியோவாக பதிவு செய்து அதனை அவரது தனது யுடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

தயாரிப்பு - பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு - வில்பிரட் தாமஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: