கிறிஸ்துவ தேவாலயத்தில் பைபிள் வசனம் பேசிய இஸ்லாமிய பெண்: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

காணொளிக் குறிப்பு, தேவாலயத்தில் பைபிள் வாசகம் பேசிய இஸ்லாமியர் - கோவையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான தேவாலயம் ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜெபத்தின்போது இஸ்லாமியர் ஒருவர் பைபிள் வாசகம் பேசிய நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியது.

கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ ஆல் சோல்ஸ் தேவாலயம் தமிழ்நாட்டின் பழமையான தேவாலயங்களுள் ஒன்று. கடந்த 1872-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தேவாலயம் கடந்த 150 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஜெபக் கூட்டத்தின்போது ஷெஹனாஸ் பர்வீன் என்கிற இஸ்லாமிய பெண் உரையாற்றினார். அவர் தன்னுடைய உரையை பைபிள் வாசகத்துடன் முடித்த காட்சிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

தயாரிப்பு - மோகன்

படத்தொகுப்பு - டேனியல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: