You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூகுள் மேப்பை நம்பிச் சென்று வெள்ளத்தில் சிக்கிய கார் மீண்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து கர்நாடக மாநிலம் சர்ஜாபூருக்கு ராகேஷ் என்பவர் தனது குடும்பத்தினர் மூவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கூகுள் மேப் உதவியுடன் அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது, வழியில், தரைப்பாலத்தை தாண்டி ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காரில் சிக்கியிருந்த ராகேஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் பத்திரமாக மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொணடது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்