நொய்டா இரட்டை கோபுரம் எப்படி இடிக்கப்பட்டது? ஏன்?
இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இரட்டை கோபுரம். டெல்லி அருகே அமைந்துள்ளது இந்த இடம்.
318 அடி உயரமுள்ள இந்த கோபுரம் விதிகளை மீறி கட்டப்பட்ட காரணத்துக்காக இடிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், இவ்வளவு உயரம் கட்டி எழுப்பப்படும் வரை அது தெரியவில்லையா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். அடிக்கல் நாட்டியது முதல் இடிக்கப்பட்டது வரை இந்த கோபுர விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை காலவாரியாகப் பார்க்கலாம்.
அபெக்ஸ் (32 அடுக்கு), சியேன் (29 அடுக்கு) என்று பெயரிடப்பட்ட இந்த இரட்டை கோபுரங்கள், இந்திய தலைநகரில் இருக்கும் உயரமான குதுப் மினாரை விட உயரமானவை. கட்டுமான விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த கோபுரத்துக்காக நடத்தப்பட்ட சட்டப் போராட்டம் மிக நீண்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரையிலான போராட்டம் அது. நாம் தொடங்க வேண்டிய ஆண்டு 2004.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்