நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் 'முதல் பெண் பொறியாளர்'
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் 'முதல் பெண் பொறியாளர்' என்று அழைக்கப்படுகிறார் அகன்க்ஷா குமாரி.
ஜார்க்கண்டின் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த அகன்க்ஷா, சிறுவயதில் இருந்தே நிலக்கரி சுரங்கத்தின் பணிகளைப் பார்த்திருக்கிறார். அதனால், அகன்க்ஷாவுக்கு அதன் மேல் ஓர் ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக நிலக்கரி சுரங்கத்தில் ஆண்கள் வேலைப் பார்ப்பதை பார்த்திருப்போம். அகன்க்ஷா கல்லூரியில் பொறியியல் படிக்கும் போது,அங்கு அவருடன்
60 மாணவர்கள் படித்தனர். அதில் இவர் மட்டுமே பெண். இந்த துறையில் நடந்த தொழில்நுட்ப வளர்ச்சி, இப்போது இந்த வேலையில் உள்ள அபாயங்களைக் குறைத்துள்ளன என்று அவர் நம்புகிறார்.
செய்தியாளர் - ஆனந்த் தத்
ஒளிப்பதிவு - ரிஷப் கௌதம்
படத்தொகுப்பு - ருபையத்
தயாரிப்பு - சுசீலா சிங்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்