You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருணைக் கொலை செய்யுமாறு மனு கொடுத்த திருநங்கை - என்ன காரணம்?
கர்நாடகாவைச் சேர்ந்த 29 வயது திருநங்கை ரிஹானா இர்ஃபான் தன்னை கருணைக் கொலை செய்யக் கோரி கடந்த வாரம் மாவட்ட துணை ஆணையரிடம் கடிதம் அளித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கர்நாடகாவின் குடகு மாவட்ட தலைமையகமான மடிகேரி பகுதியில் வசிக்கும் ரிஹானா ஏன் அப்படிச் செய்தார் என்பது குறித்து விரிவாக பிபிசியிடம் பேசினார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரிஹானா அவருக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் காரணமாக தனது பட்டப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
அவர் தனியாக வாழ விரும்புகிறார். தனக்கு வேலை கிடைப்பதில் என்ன சிக்கல் என்பதையும் கூறியுள்ளார். ரிஹானாவின் குடும்பத்தினர் தற்போது அவருடன் தொடர்பில் இல்லை. அவரது அம்மா அவ்வப்போது பேசுவார். ரிஹானா இறக்க விரும்பவில்லை, ஆனால் வாழ்க்கையை வாழ, அவர் தங்குவதற்கு ஒரு வீடு தேவை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்