தேனீக்களின் எண்ணிக்கை குறைவால் சூரியகாந்திக்கு கைமுறை மகரந்த சேர்க்கை

காணொளிக் குறிப்பு, தேனீக்களின் எண்ணிக்கை குறைவால் சூரியகாந்திக்கு கைமுறை மகரந்த சேர்க்கை: விவசாயிகள் மகிழ்ச்சி
பிரசுரிக்கப்பட்டது

வேளாண் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி சூரியகாந்தி விவசாயிகள் பயிர்களில் கைமுறை மகரந்த சேர்க்கை செய்து நல்ல விளைச்சல் பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது. சூரியகாந்தி மிகவும் எளிமையான பயிர். குறைந்த தண்ணீரில் நிறைந்த மகசூல் தரக்கூடியது.

சூரியகாந்தி செடியில் மகரந்த சேர்க்கையில் பெரியளவு பணியைச் செய்தது தேனீக்கள், குளவிகள், ஈக்கள், வண்டுகள். சூரியகாந்தி பூக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை தீவிரமாக நடைபெறுவதால் அதிக மகசூல் கிடைக்கும். இப்போது தேனீக்கள் மிகவும் குறைந்துவிட்டதால், சூரியகாந்தி செடிகளுக்கு செயற்கை முறை மகரந்த சேர்க்கையின் இரண்டு முறைகளை தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: வில்ஃபிரெட் தாமஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: