இலவசங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சி.டி.ரவிகுமார், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டது.
அந்த வழக்கில் இன்று இலவசங்கள் தொடர்பான இந்த வழக்கை வேறு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தவிட்டுள்ளார். மேலும், இலவசங்களை அறிவிப்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விவரம் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்