You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராக்கெட்ரி படத்தை எடுக்க மாதவன் வீட்டை இழந்தாரா? - ட்விட்டரில் நடந்தது என்ன?
ராக்கெட்ரி படத்திற்காக நடிகர் மாதவன் தனது வீட்டை இழந்ததாக ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் ட்விட் செய்த நிலையில் அதை மறுக்கும் விதமாக நடிகர் மாதவன் ரீ ட்வீட் செய்து “நான் எனது வீட்டை எதற்காகவும் இழக்கவில்லை” என்று பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் மாதவன் இயக்கி, நடித்து வெளியான படம் ராக்கெட்ரி, நம்பி விளைவு. தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் மாதவன், நரேந்திர மோதி உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து “ ’ராக்கெட்டரி’ படத்திற்காக மாதவன் தன்னுடைய வீட்டை இழந்தார். இந்தப் படத்தை இயக்க, முன்னதாக ஒப்புக்கொண்ட இயக்குநர் பின் வாங்கினார். ஆனால் அதே நேரத்தில் அவரது மகன் நாட்டிற்காக நீச்சல் போட்டியில் பல பதக்கங்களை பெற்று வருகிறார். சல்யூட் ஃபார் மேடி என்று பதிவிட்டிருந்தார் ஒரு பதிவர். இதைதான் மாதவன் மறுத்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்