கண் பார்வை இழந்த கணவர் - தொழில்முனைவோராக மாறிய மனைவி

பிரசுரிக்கப்பட்டது

ஒருவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கே, அவருக்கு தொழிலாக மாறினால், அது அவரது வெற்றிக்கான பாதைதான். பஞ்சாப் மாநிலம் பட்டாலாவைச் சேர்ந்த சுரபி, வீட்டிலிருந்தபடி தையல் பயின்றார். பிறகு ஒரு சிறிய துணிக்கடை என தொடங்கி, இப்போது சொந்தமாக ஒரு ஆடை தொழிற்சாலையை நடத்திவருகிறார்.

48 வயதாகும் சுரபி பெண்களுக்கு தேவையான வெவ்வே வடிவங்களில் புதுப்புது ஆடைகளை தயாரிக்கிறார். சுரபியின் டிசைன் ஆடைகள், பஞ்சாபின் பல மாவட்டங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது சுரபியின் வெற்றிக் கதை. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு வலிமிகுந்த விபத்தும் நீண்ட போராட்டமும் இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: