BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், MUDUMALAI TIGER RESERVE TEAM
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில், இந்த வாரம் கோவையில் சிவன் கோவில் இடிக்கப்பட்டதா என்பது குறித்த பிபிசி தமிழின் கள ஆய்வு, செஸ் ராஜாவுக்கு சிலுவைக்குறி வந்தது எப்படி, கிருத்திகா உதயநிதி பேட்டி, அதிசய கிணறுகள் என்று அழைக்கப்படும் கிணறுகளின் பின்னால் உள்ள அறிவியல், ஒரு காட்டு யானையின் நம்பிக்கை தரும் பயணம் ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
அதிசய கிணற்றின் ரகசியம் என்ன?

தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள திசையன்விளை பகுதியில் அதிசய கிணறு போல் சுற்று வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது.
கோவையில் கோவில் இடிப்பு? Factcheck

கோவையில் சிவன் கோவில் ஒன்று இடிக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகப் பரவி வருகிறது. அதன் உண்மை நிலை என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தது.
செஸ் ராஜாவுக்கு சிலுவைக் குறி ஏன்?

பட மூலாதாரம், Getty Images
சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பதை நீக்க வேண்டும் என இந்து மதம் சார்ந்த கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்திருக்கும் கருத்து சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகிவருகிறது.
கிருத்திகா உதயநிதி பேட்டி

சமீபத்தில் "பேப்பர் ராக்கெட்" என்ற வெப்சீரீஸ் ஒன்றை இயக்கி ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார் கிருத்திகா உதயநிதி.
மக்கள் எப்படி இந்த வெப்சீரீசை எடுத்துக்கொள்வார்கள் என்று, ஆரம்பத்தில் தான் நினைத்ததாகவும், ஆனால் பலர் இந்த தொடரை தங்கள் சொந்த வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து தன்னிடம் கருத்துகளைப் பகிரும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தன் அனுபவங்களை பிபிசி தமிழுக்காக பகிர்ந்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
ரிவால்டோ - காட்டைத் தேடி ஒரு யானையின் பயணம்

பட மூலாதாரம், MUDUMALAI TIGER RESERVE TEAM
ரிவால்டோ. தும்பிக்கையின் நுனி வெட்டுப்பட்ட அந்த யானை, ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது அதன் இல்லமான முதுமலை காப்புக்காட்டுக்குள் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





























