யானைகள் தினம் : ரிவால்டோ யானையின் காடு திரும்பிய சுவாரஸ்ய பயணம்

காணொளிக் குறிப்பு, ரிவால்டோ: காடு நோக்கி ஒரு காட்டு யானையின் சுவாரஸ்ய பயணம்
பிரசுரிக்கப்பட்டது

ரிவால்டோ. தும்பிக்கையின் நுனி வெட்டுப்பட்ட அந்த யானை, ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது அதன் இல்லமான முதுமலை காப்புக்காட்டுக்குள் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு பல்லுயிர்ச்சூழல் வாரியத்தின் தலைவராக இருக்கும் முனைவர் ஷேகர் குமார் நீரஜ், இந்தியாவில் தனக்குத் தெரிந்து, வனத்துறையால் பிடிக்கப்பட்டு முகாமில் வைக்கப்பட்ட காட்டு யானை மீண்டும் காட்டிற்குள் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என்கிறார்.

யார் இந்த ரிவால்டோ? பிரேசில் கால்பந்தாட்ட வீரரின் பெயரைக் கொண்ட இந்த யானை எதற்காக பிடிக்கப்பட்டது? அதை மீண்டும் காட்டில் விடுவிக்க ஏன் அவ்வளவு முயற்சிகள்? அதைத் தெரிந்துகொள்ள, சில நிமிடங்களுக்கு நாமும் ரிவால்டோவோடு முதுமலை காட்டுக்குள் பயணிப்போம்.

தயாரிப்பு: க.சுபகுணம்

படத்தொகுப்பு: சாம் டானியல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: