பெண்களுக்காக பெண்களே நடத்தும் பைக் டாக்சி சேவை நிறுவனம்

காணொளிக் குறிப்பு, பெண்களுக்காக பெண்களே நடத்தும் பைக் டாக்சி சேவை நிறுவனம்
பிரசுரிக்கப்பட்டது

ஸரீனா 12 வருடங்களாக பைக் ஓட்டி வருகிறார். ஆரம்பத்தில் ஜாலியாக ஓட்டக் கற்றுக்கொண்டவருக்கு, இன்று அதுவே வருமான ஆதாரமாகிவிட்டது.

முதலில் ரைடராகப் பணியாற்ற நினைத்தாலும், ஆண்களும் தனக்குப் பின்னால் அமர்ந்து வரலாம் என்று நினைத்து பின்வாங்கினார்.

ஆனால், இன்று அவர் ஹைதராபாத் பைக் டாக்சி நிறுவனமான டோவ்லியில் பணியாற்றுகிறார். காரணம், இங்கு பைக் ஓட்டுநர்கள் அனைவரும் பெண்கள், வாடிக்கையாளரும் பெண்களே. இந்த அமைப்பும் பெண்களாலேயே தொடங்கப்பட்டது.

ஸைனப் மற்றும் உஸ்மா கடூன், ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவளிக்கின்ற தனியார் மையமான அட்வென்ச்சுர் ஹப் மூலமாக டோவ்லியை தொடங்கினார்கள். ஸைனப், உஸ்மா இருவரும் ஸரீனவை போன்ற பெண்களுக்கு இதில் வேலைவாய்ப்பு வழங்குகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: