உலக தாய்ப்பால் வாரம்: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

பிரசுரிக்கப்பட்டது

தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் இருப்பதைப் போலவே, குழந்தை பிறந்து மூன்று அல்லது ஆறு மாதங்களில் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்போதும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்று நினைக்கும்போது அதற்கு பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் உதவுகிறது.

குழந்தை பிறந்து 3 மாதங்களிலேயே வேலைக்குச் சென்றால், தாய்ப்பாலை எப்படிச் சேமிப்பது, பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் எப்படி பயன்படுத்துவது, அதைப் பயன்படுத்தி தாய்ப்பாலை எடுத்து வைத்து குழந்தைக்குக் கொடுப்பது பாதுகாப்பானதா என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார், மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் ஆலோசகர், டீனா அபிஷேக்.

தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்

படத்தொகுப்பு: வில்ஃப்ரெட் தாமஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: