You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசியின் சர்வதேச நேயர்களில் 'இந்தியா' தொடர்ந்து முதலிடம் - GAM அறிக்கை
பிபிசி சேவைகளை கேட்பவர்கள், பார்ப்பவர்கள் மற்றும் பயனர்களின் எண்ணிக்கையைக் காட்டும் தனது வருடாந்திர அறிக்கையை பிபிசி வெளியிட்டுள்ளது. அதன்படி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகில் பிபிசி சேவைகளைப் பயன்படுத்துபவர்களில் அதிகபட்சம்பேர் இந்தியாவில் உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் பிபிசி நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் எத்தனை பேர் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள் அல்லது பயன்படுத்துகிறார்கள் என்பதை Global Audience Measure (GAM) எனப்படும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் பிபிசியின் சேவைகளை கேட்பவர்கள், பார்வையாளர்கள் மற்றும் வாசிப்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 66 லட்சம். இது உலகிலேயே மிக அதிகம்.
இது கடந்த ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகமாகும்.
இந்தியாவில் பிபிசியின் உள்ளடக்கம் ஆங்கிலம், ஹிந்தி தவிர, தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது.
பிபிசியின் இந்தி மொழி சேவை கடந்த ஆண்டை விட வாசகர்கள், கேட்போர் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 17 சதவிகித அதிகரிப்பை பெற்றுள்ளது.
50 கோடி இலக்கு
பிபிசியின் வாசகர்கள், பார்வையாளர்கள் மற்றும் கேட்பவர்களின் எண்ணிக்கை 50 கோடியை நெருங்குகிறது என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை 2022 ஆம் ஆண்டிற்கான இலக்காக பிபிசி நிர்ணயித்திருந்தது. பிபிசி அந்த இலக்கை தாண்டும் பாதையில் உள்ளது.
பிபிசியின் சர்வதேச சேவைகள் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 49.24 கோடி மக்களை சென்றடைகின்றன.
பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் மொழியியல் சேவைகள், வேர்ல்ட் சர்வீஸ் ஆங்கிலம், வேர்ல்ட் நியூஸ் டிவி, பிபிசி.காம் மற்றும் பிபிசி மீடியா ஆக்ஷன் ஆகியவற்றின் பார்வையாளர்கள், கேட்பவர்கள் மற்றும் வாசகர்கள் இதில் அடங்குவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்