100 வயது கணவன்; 90ஐக் கடந்த மனைவி - இன்னும் தொடரும் உழைப்பு

பிரசுரிக்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் அலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். 100 வயதை கடந்ததாகக் கூறும் இவர் தனது பிள்ளைகளால் கைவிப்பட்ட நிலையில், தனது மனைவி அம்சவள்ளியை காப்பாற்ற தள்ளாத வயதிலும் இரும்புபட்டறை நடத்தி வருகிறார்.

கோவிந்தராஜ்-அம்சவள்ளி தம்பதியினருக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால், தற்போது பிள்ளைகள் யாரும் தங்களைக் கண்டுகொள்வதில்லை என்று கூறும் இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறது இந்தக் காணொளி.

தயாரிப்பு: ஆர். அருண்குமார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :