கொத்தடிமையாக இருந்து தொழில் முனைவோர் ஆன இருளர் தம்பதியர்

பிரசுரிக்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதிக்கு உட்பட்ட கயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த அய்யனார் மற்றும் பேபி ஷாலினி தம்பதியினர் சுயமாக அகர்பத்தி தயாரிக்கும் தொழிற் கூடம் வைத்துள்ளனர்.

அய்யனாரின் தந்தைக்கு முந்தைய சந்ததியினர் தொடங்கி அய்யனாருக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்தே செங்கல் சூளையில் கொத்தடிமை என்று‌ அழைக்கப்படும் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளனர்.

பின்னர் இந்த அடிமை தொழிலிலிருந்து மீண்டு‌‌ சுயமாகத் தொழில் தொடங்க கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்‌‌ மேற்கொண்டு முயற்சியில் அகர்பத்தி மற்றும் சாம்பிராணி பத்தி தயாரிக்கும் தொழிற் கூடத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :