மரபணு குறையால் மாறிய முகம் - சவாலை சாதனையாக மாற்றிய யுவராஜ் 'டீச்சர்'
பிரசுரிக்கப்பட்டது
சென்னை கல்பாக்கத்தைச் சேர்ந்த குழந்தைகள் எழுத்தாளர் யுவராஜ்,தமது வாழ்நாளின் பெரும் பகுதியை குழந்தைகளுக்கு இலவச கல்வி போதிப்பதற்காகவே அர்ப்பணித்திருப்பதாகக் கூறுகிறார். இவரிடம் பயிலும் மாணவர்கள் யுவராஜ் 'டீச்சர்' என்றே இவரை அழைக்கின்றனர்.
இளம் வயதில் ஏற்பட்ட மரபணு குறைபாட்டால் இவரது முகத்தில் சிறு, சிறு புள்ளிகள் தோன்றின. அதனால் அவர் பல்வேறு பிரச்னைகளை அவர் எதிர்கொண்டார். ஆனாலும், காலப்போக்கில் அந்த சவால்களையே ஒரு சாதனையாக மாற்றி உள்ளூர் குழந்தைகளை ஊக்கப்படுத்தி வருகிறார் யுவராஜ்.
காரைத்திட்டு கிராமத்தில் உள்ள இருளர் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க இப்போது தமது முழு நேரத்தையும் இவர் அர்ப்பணித்திருக்கிறார்.
தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: வில்ஃபிரட் தாமஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்