You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கணக்கு, ஆங்கில பாடங்களை எளிதாக கற்க புதிய செஸ் விளையாட்டைக் கண்டறிந்த தையல் கடைக்காரர்
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறுவர், சிறுமியர்கள் எளிதாக கணக்கு, ஆங்கில பாடத்தை கற்றுக் கொள்ளும் வகையில் புதிய வகையான செஸ் விளையாட்டை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று இருக்கிறார் தையல் கடைக்காரர் முருகன்.
பள்ளி மாணவர்கள் சதா மொபைல் மற்றும் டிவியில் மூழ்கி பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக புதிய வடிவிலான செஸ், லூடோ உள்ளிட்ட விளையாட்டுகளை இவர் உருவாகியுள்ளார்.
குறிப்பாக, கிராமப்புற பள்ளி மாணவர்கள் கணக்கு மற்றும் ஆங்கிலம் கற்க அரும்பாடு பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு முருகன் உருவாக்கிய புதிய விளையாட்டு மூலம் கணக்கு மற்றும் ஆங்கில வார்த்தைகளை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் விதமாக சில எண்கணித முறையிலான செஸ் விளையாட்டையும், ஆங்கில வார்த்தைகளை தொகுத்து சேர்க்கும் ரம்மி விளையாட்டையும், ஆங்கில வார்த்தைகள் இருக்கக்கூடிய பகடைக்காயை உருட்டி புதிய ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்து கோர்த்து விளையாடும் முறை குறித்து மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறார்.
தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பிரசன்னா வெங்கடேஷ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்