ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையில் எவை அடங்கும்?

காணொளிக் குறிப்பு, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையில் எவையெல்லாம் அடங்குகின்றன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில், ஜூலை 1, 2022 முதல், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7, 2021 அன்று குளோபல் பிளாஸ்டிக் வாட்ச் இணையதளம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் பெரியளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம், வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2019-20ஆம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் மொத்த அளவு, 34,69,780 டன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த அளவு 50 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், பூமியில் உருவாகும் மொத்த கழிவுகளின் கூட்டு எடை, இந்தப் பூமியிலுள்ள அனைத்து மனிதர்களின் மொத்த எடைக்குச் சமம் என்று மதிப்பிடுகிறது.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் என்றால் என்ன என்பதை பார்போம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: