கல்லூரி வளாகத்திற்குள் பொட்டலாக இருந்த 15 ஏக்கர் நிலத்தில் காடு உருவாக்கிய கல்லூரி முதல்வர்
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரி தாகூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ், கல்லூரி வளாகத்தில் இருக்கும் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் காடுகள் அமைத்துப் பராமரித்து வருகிறார். குறிப்பாக இந்தக் காடுகளில் சுமார் 5000 மரங்கள், 25 வகையான பட்டாம்பூச்சிகள், பறவைகள் இருக்கின்றன.
மேலும் இந்தக் குறுங்காடுகள், பூந்தோட்டம், காய்கறி, பழத் தோட்டங்கள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இவரின் முயற்சியால் பொட்டலாக இருந்த கல்லூரி வளாகத்தை இயற்கை எழிளகமாக மாற்றி அமைத்துள்ளார். இவரது முயற்சிக்கு அந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் தொடங்கி அங்குப் பயிலும் மாணவர்கள் வரை ஆதரவாக இருந்து உதவியுள்ளனர்.
காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்