பெருமூளை வாதம் பாதிப்பு - தடைகளைத் தாண்டி தன்னம்பிக்கையுடன் வாழும் குஜராத்தி பெண்

காணொளிக் குறிப்பு, பெருமூளை வாதம் பாதிப்பு, பெற்றோர் இல்லை - தடைகளைத் தாண்டி தன்னம்பிக்கையுடன் வாழும் குஜராத்தி பெண்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரிலுள்ள ஜேத்பூரைச் சேர்ந்த வந்தனா கட்டாரியா பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

உடல் ரீதியான சவால்கள் இருந்தபோதிலும், வந்தனா தனது நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் எப்போதும் கலகலப்பாக இருக்கிறார். அவர் தனியாக வசித்து வருகிறார். தனது வாழ்வாதாரத்திற்காக ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அருகில் பழக்கடை நடத்தி வரும் இவரது தந்தையின் நண்பர் இவரை பார்த்துக்கொள்கிறார். ஒரு தொண்டு நிறுவனம் வந்தனாவின் தேவைகளையும் கவனித்துக் கொள்கிறது.

காணொளி - பிபின் தங்கரியா/ரவி பர்மர்

தயாரிப்பு - தீபக் சுடாசமா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: