உதய்பூர் படுகொலை நடந்த பகுதியில் இப்போதைய கள நிலவரம் என்ன?

காணொளிக் குறிப்பு, உதய்பூர் படுகொலை நடந்த பகுதியில் இப்போதைய கள நிலவரம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இரண்டு பெரிய வாயில்களைச் சுற்றிலும், இரண்டு டஜன் ராஜஸ்தான் போலீஸார் ஆயுதங்களுடன் தயாராக நிற்கிறார்கள். குறுகலான ஒரு சாலை. கடந்த மூன்று நாட்களாக அங்கு ஈ, எறும்பு கூட உள்ளே நுழைய முடியாத அளவுக்கு காவல்துறை கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் பலமாக உள்ளன.

ராஜஸ்தானின் உதய்பூரின் இந்தப் பகுதி 'ஹாதிபோல்' என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்குள்ள ஒரு தெருவில், தையல்காரரான கன்ஹையாலால், இரண்டு முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டார்.

அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. கன்ஹையா லாலை கொலை செய்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: