You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை வயோதிக தம்பதியின் கண்ணீர் கதை - தனுஷ்கோடி கரையில் உணவின்றி தவிப்பு
பிரசுரிக்கப்பட்டது
தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கடற்கரை பகுதியில் வயது வயோதிக தம்பதி, கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் மரைன் போலீஸ் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் காவலர்கள் கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் இருந்த இருவரை மீட்டனர்.
தாய்நாட்டை விட்டு வந்த அவர்களின் கதை நெஞ்சை உருக்குவதாக உள்ளது.