You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏற்காட்டில் கிடைக்கும் 'சைவ மட்டன் சூப்' - என்ன சிறப்பு?
முடவன் ஆட்டுக்கால் கிழங்கு எனும் ஒரு வகை மூலிகைக் கிழங்கு ஏற்காட்டில் கிடைக்கிறது. இந்த மூலிகைக் கிழங்கு, ஆட்டுக்கால் போன்ற தோற்றத்தில் இருக்கும். கிழங்கின் மேல்தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து சூப் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்காடு சுற்றுலா வரும் மக்கள் இந்த சூப்பை குடிக்க தவறுவதில்லை. அவர்கள் இதன் சுவை ஆட்டுக்கால் சூப் போலவே இருப்பதாகக் கூறுகின்றனர். சூப் குடிப்பதற்காக ஏற்காடு சேர்வராயன் மலை கோயில் வருவோரும் உண்டு. ஏற்காட்டில் பரவலாக இந்த சூப் கிடைத்தாலும், சேர்வராயன் கோயில் அருகே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
தயாரிப்பு, ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஏ. எம். சுதாகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்