மகாராஷ்டிர அரசியல் குழப்பங்களுக்குக் காரணம் ஆபரேஷன் லோட்டஸா? 5 காரணங்கள்

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிர அரசியல் குழப்பங்களுக்குக் காரணம் ஆபரேஷன் லோட்டஸா? 5 காரணங்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஏக்நாத் ஷிண்டேயின் எதிர்ப்பு சிவசேனையின் உள்விவகாரம்" என்றார். ஆனால் இது உண்மையிலேயே சிவசேனையின் உள் விவகாரமா? அல்லது இந்தக் கிளர்ச்சிக்கான ரிமோட் கண்ட்ரோல் பாஜகவிடம் உள்ளதா?

ஷிண்டே குழுவினருடன் பாஜக எவ்வளவு இடைவெளியைக் கடைப்பிடித்தாலும், சிவசேனையின் தவறான நடவடிக்கைகளால் அது சிக்கலில் உள்ளது என்று சொன்னாலும், சிவசேனையின் வீட்டில் எரியும் நெருப்பிற்கு எண்ணெய் வார்க்கும் வேலையை பாஜக செய்திருப்பது உண்மைதான்.

தற்போது சுமார் 40 சிவசேனை எம்எல்ஏக்கள் ஷிண்டே குழுவில் இணைந்துள்ளதாக தெரிகிறது. பாஜகவும் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியை வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் ஷிண்டேயும் ஃபட்னவிஸும் ஒருவரையொருவர் பகிரங்கமாக ஆரத்தழுவிக்கொண்டால், அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: