திரெளபதி முர்மூ: பாஜக கூட்டணி அறிவித்துள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் - யார் இவர்?

காணொளிக் குறிப்பு, திரெளபதி முர்மூ: பாஜக கூட்டணி அறிவித்துள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் - யார் இவர்?
பிரசுரிக்கப்பட்டது

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மூவை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்திருக்கிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பாஜகவின் அறிவிப்பு வந்துள்ளது.

முர்மு 20015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராக இருந்தார். 2015 வரை பாஜகவின் எஸ்.டி. மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இரண்டு முறை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்.

இவரைப் பற்றி வேறு என்ன தெரியும்? விவரம் அறிய இந்த காணொளியை பார்க்கவும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: