இப்போதான் வெளியுலகம் புரியுது: பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் முதல் காணி பழங்குடி இளைஞர்கள்
காணி பழங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் முதன்முறையாக பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறார்கள்.
அதுகுறித்துப் பேசிய ஜெனிஸ் குமார், “என் அம்மாவும் அப்பாவும் தோட்ட வேலை தான் பார்க்கிறார்கள். நானும் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வேலையின்றி தான் இருந்தேன். அந்த நேரத்தில் கம்பெனிகளில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கூறினார்கள்.
அதில் எனக்கும் இன்னொரு பெண்ணுக்கும் வேலை கிடைத்தது. காணி மக்களில் ஊரை விட்டு வெளியே வந்து வேலைக்குச் செல்லும் முதல் இருவர் நாங்கள் தான்.
ஊரை விட்டு வரும்போது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், எங்கள் மக்களுக்கு நாங்கள் இந்த வேலைக்குச் செல்வதில் பெருமை,” என்றார்.
பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ள சந்தியா, ”நான் படித்தது பத்தாம் வகுப்பு தான். இப்போது ஆட்சியர் மூலமாக திருநெல்வேலி வேலைவாய்ப்பு முகாமில் இந்த நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. முன்பு வீடு, தோட்டம் என்று இருந்துவிடுவோம். இப்போது வேலைக்குச் செல்வதால் மாதாமாதம் சம்பளம் கிடைக்கிறது,” என்று கூறினார்.
தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்