ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை - பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்ட ராணுவத்தினர்

பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் துடாபூர் கிராமத்தில் பெற்றோர் கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது குழந்தை சிவம் அங்கிருந்த ஆழ்துழை கிணற்றில் விழுந்தது.

இதையடுத்து உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் ராணுவ வீரர்கள் குழு பல மணி நேரம் போராடி குழந்தையை மீட்டுள்ளது.

ராணுவத்தினர் மிகவும் புத்திசாலித்தனமாக உலோக கொக்கியை மணிலா கயிற்றில் கட்டி போர்வெல்லில் இறக்கினர். சிறிது நேரம் கழித்து, அந்த கம்பி குழந்தையின் சட்டையில் மாட்டிச் சிக்கியது. இதையடுத்து மிகவும் லாவகமாக அந்த குழந்தையை தூக்கி பத்திரமாக ராணுவத்தினர் மீட்ட காட்சியை இந்த காணொளியைப் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :