You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்தில் சிங்கத்திற்கு நடந்த கண்புரை அகற்றும் அறுவை சிகிச்சை - உதவும் மதுரை நிறுவனம்
நீங்கள் பார்ப்பது, சிங்கத்தின் கண்புரை அகற்றும் அறுவை சிகிச்சையின் காட்சிகள். சமீபத்தில், கிர் காட்டிலுள்ள ஜாம்வாடா மலைத்தொடரில் ஐந்து வயது சிங்கத்தின் நடத்தை மலையேற்றக்காரர்களால் கவனிக்கப்பட்டது. இரை அருகில் இருந்தாலும் அந்த சிங்கம் எதுவும் செய்யாமல் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில், அதன் இரு கண்களிலும் கண்புரை இருப்பது தெரியவந்தது. பின்னர் சிங்கம் ஜூனாகத்தில் உள்ள சக்கர்பாக் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டு அங்கு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சக்கர்பாக் உயிரியல் பூங்கா வழங்கிய தகவலின்படி, சிங்கத்தின் கண்களுக்காக லென்ஸ் தயாரிப்பதற்கு, மதுரையைச் சேர்ந்த லென்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
தயாரிப்பு - ஹனிஃப் கோகர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்