மணப்பெண்களுக்கு திருமண ஆடைகள் இலவசம் - கேரளாவில் 'ஆடை வங்கி' நடத்தி வரும் நசீர் தூத்தா

பிரசுரிக்கப்பட்டது

திருமணங்கள் எப்போதும் நம் வாழ்வில் அழகான தருணம். அன்று மணமக்கள் தாங்கள்அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஆனால், சில சமயங்களில், பொருளாதார நிலை காரணமாக, பல மணப்பெண்களுக்கு இந்தக் கனவு நிறைவேறாமல் இருக்கிறது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தூத்தா கிராமத்தில் வசிக்கும் நசீர் தூத்தா, இத்தகைய பெண்களுக்கு உதவுகிறார். அவர் ஓர் ஆடை வங்கி நடத்தி வருகிறார். இந்த 'ஆடை வங்கி' மூலம் மணப்பெண்களுக்கு லெஹங்கா செட்கள், சேலைகள் இலவசமாக தருகிறார்.

செய்தியாளர்: இம்ரான் குரேஷி

ஒளிப்பதிவு: சி.வி.லெனின்

படத்தொகுப்பு: ரூபாயத் பிஸ்வாஸ்

தயாரிப்பு: சுசீலா சிங்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: