பெற்றோரால் பிரிக்கப்பட்ட தன்பாலின தம்பதியர் - சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரசுரிக்கப்பட்டது

பெற்றோரால் பலவந்தமாகப் பிரிக்கப்பட்ட லெஸ்பியன் காதல் ஜோடி சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆலுவா பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஆதிலா நசரினின் ஆட்கொணர்வு மனு விசாரணையின் இறுதியில், நீதிபதி கே.வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, ஆதிலா நசரின் மற்றும் அவரது காதலி ஃபாத்திமா நூரா இணைந்து வாழ அனுமதித்து தீர்ப்பளித்துள்ளது.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: